search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேன் டிராக்டர் மோதல்"

    ஆம்பூர் அருகே டிராக்டர் மீது வேன் மோதியதில் 16 பெண் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே காமேஸ்வரம் பகுதியில் தனியார் ஷூகம்பெனி உள்ளது. இதில் கோவிந்தாபுரம், கங்காபுரம், தாலுகா அலுவலக பகுதி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து தினம்தோறும் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலைக்கு வந்து செல்கின்றனர். வேலைக்கு வரும் பெண்களை அழைத்து வர ஷூகம்பெனி சார்பில் வேன் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பெண்களை வேலைக்கு அழைத்து கொண்டு வேன் வந்து கொண்டிருந்தது.

    ஆம்பூர் தாலுகா அலுவலகம் அருகே சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதியது. இதில் வேனில் பயணம் செய்த 16 பெண்கள் படுகாயமடைந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் போலீசார் வேனில் ஈடுபாடுகளில் சிக்கி இருந்த பெண்களை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×